மனைவி:- மாமூ! நாட்ல எது எதுலதான் கலப்படம் பண்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சு..., நாசமா போறவங்க!
கணவன்:- குட்டிம்மா! அப்படி எதுலதான் கலப்படம் பண்ணி இருக்கானுங்களாம்!
மனைவி:- உப்புத்தூள்ல கூட கலப்படம் பாருங்க! எவ்ளோ கொட்டினாலும் பத்தவே மாட்டேங்குது!
கணவன்:- அடிப்பாவி! எனக்கு உடம்புக்கு முடியலேன்னு உன்னை ஒருநாள் சமைக்க சொன்னது உண்மைதான்! அதுக்காக, உப்பத்தூளுக்கும், சோடாத்தூளுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாமல் இருக்கே!
No comments:
Post a Comment