Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

நான்காவது தூண் இப்போது நம் கையில்

நான்காவது_தூண்_இப்போது_நம்_கையில்

உலக ஊடகங்க நாள் இன்று.பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் விதமாக  ஐக்கிய நாடுகள் சபையினால் மே 3ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த தினம்  சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்றே நான் நம்புகிறேன்.தை புரட்சி சமூக ஊடகங்கள் இல்லாமல் நமக்கு சாத்தியபட்டிருக்காது.
இன்று ஊடகங்கள் அனைவரின் கையிலும் இருக்கிறது கைபேசியாக . அதை வைத்து பெரும் பாலான  நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.சரியா தவறா என்று கூட பார்க்காமல் எங்கிருந்தோ யார் மூலமாகவோ வரும் குப்பை செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறோம் அல்லது நகைச்சுவை என்ற பெயரில் தனிமனிதன் மனதை புண்படுத்தி கொண்டிருக்கிறோம்.நான் அரசியல் நையாண்டிகளை வரவேற்கிறேன்.
சமுக  ஊடக சுதந்திரம் பாதுகாக்கப் பட வேண்டியது அதன் மூலம் வரும்  செய்திகளை மக்கள்  நம்புகிறார்கள். நாம் பதிவிடும் செய்திகள் சமூக முற்போக்கு சிந்தனைக்கு வழிவகுக்க வேண்டும்.
நாம் பதிவிடும் செய்திகளை நமது மகனும் மகளும் பார்க்க நேரிடலாம்..அதையே அவர்கள் காலத்திலும்  கடத்த கூடும். ஊடக தருமம் என்பது சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்
சமூக ஊடகங்கள்  கலை இலக்கிய சிந்தனைகளை வளர்தெடுக்க வேண்டிய தருணம் இது.கலையும் இலக்கியமுமே மனிதனை மகிழ்ச்சியான மனித தன்மையுடைய மனிதனாக வைத்திருக்கிறது.
நாம் ஒன்றை மனதில் நிறுத்துவோம் நண்பர்களே. அது காந்தி சொன்ன மூன்று குரங்கு பொம்மை.அவைகளின் கையில் இப்போது கைபேசி. கைபேசியில் நல்லதை படிப்போம், கைபேசியில் நல்லதை பதிவிடுவோம், கைபேசியில் நல்லதை பரப்புவோம்.அவை சமூகத்தை நல்வழியில் நடத்தட்டும்.

-பழநியப்பன் 

1 comment:



  1. Such an awesome blog thanks for sharing an useful information to all. Jan Aushadhi Medical Store.
    Jan Aushadhi Medical Store |
    jan aushadhi generic drugstore

    ReplyDelete