Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

தண்ணீர் ஆவியாகாம தடுக்க *"தெர்மாக்கோல்"*

தண்ணீர் ஆவியாகாம தடுக்க *"தெர்மாக்கோல்"* பயன்படுத்தி... பறக்கவிட்ட (மானத்தை) நம்ம ஆளுங்களை நெனக்கையில ... என்ன சொல்றதுன்னே தெரியல..?!?!?!

அன்னைக்கி, காமராசர், குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார்.
பொறியாளர் சொன்னார், " ஐயா ஆம்பூர் பள்ளம், வேலூர் மேடு. தண்ணீர் வராது" என்று சொன்னார்.
காமராசர் சொன்னார், *"பள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லறதுக்கா உன்னைய வைச்சிருக்கேன்.*
*நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்ல கொடுத்துட்டு தான் ஊரை விட்டு கிளம்பணும்."*

அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார்.

4 நாள் கழிச்சு ராத்திரி
2 மணிக்கு அவர் வீட்ல திட்ட வரைவை கொடுத்துட்டு. ஐயாவ எழுப்ப வேண்டாம் ஐயாவ காலைல பார்க்கிறேன்
அப்டின்னுட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கினார் பொறியாளர். மறுநாள் காலையில் 8 மணிக்கு எழுந்தார், வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர்.
பதறி போய் விட்டார் பொறியாளர்.
*"என் தூக்கத்த நீ கெடுக்கல. அதே மாதிரி நானும் " என்றார்.*
"அற்புதமான திட்டம்..
நன்றி.. பாராட்டுக்கள்.."
என்றார்.
திட்டத்தை நிறை வேற்றினார்.
இன்றளவும் திட்டம் செயல்படுகிறது..
அந்தப் பொறியாளர்
வேறு யாருமல்ல..
நமது மாமனிதர்
A.P.J அப்துல்கலாம் தான் அவர்..
தன்மானத் தமிழனும்,
தன்னிகரில்லா தலைவனும்.
இனி வருவார்களா.???

No comments:

Post a Comment