தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் எங்கோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை.நாங்களும் உங்களில் ஒருவர் தான்.சமுதாயம் எங்களை எளிய உழைப்பாளி வர்கமாக பார்ப்பதில்லை.
எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு, எட்டு மணிநேர ஓய்வு எங்களில் பலருக்கு சாத்தியமில்லை.இரவுநேரப் பணி அதனால் ஏற்படும் உடல் உபாதைகள்.
ஒரே அலுவலகத்தில் ஒரே அணியில் வேலை செய்தாலும் வேறுபாடு உள்ள ஊதிய கட்டமைப்பு!, வருடம் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கம் செயல் திறன் மதிப்பீடு!, மேலைநாடுகள் சந்தையை பொருத்த கொத்து கொத்தான வேலை நீக்கம்!.
ஒவ்வொரு காலாண்டும் எங்களை கறும்பா இல்லை மென்று துப்பிய சக்கையா என்று தீர்மானிக்கிறது. எங்களுக்கான அழுத்தம் சற்றே சிரமமானது.
உலகம் இருபத்திநான்கு மணி நேரமும் தொய்வின்றி இயங்க எங்கோ பல தகவல் தொழில் நுட்ப ஊழியன் உழைப்பாளர் தினமான இன்றும் உணவு உரக்கம் இன்றி உழைத்து கொண்டீருக்கிறான்.அவன் உழைப்பு மதிக்கப்பட வேண்டியது.
ஒவ்வொரு நாளும் மேலைநாட்டு சந்தை மற்றும் கொள்கையை பொறுத்து எவனோ ஒரு தகவல் தொழில் நுட்ப ஊழியன் வேலை இழக்கிறான்.அவன் எவனோ ஒருவன் அல்ல நம்மில் ஒருவன். உங்களில் ஒருவன்.
வேலை இழப்பு அதற்கான இழப்பீடு, மறுசீரமைப்பு பற்றி சிந்திக்க வேண்டிய நாள் இன்று.
-பழனியப்பன்
No comments:
Post a Comment