Tamil pulampal,kirukal, kadal kulapam,kadal mayakam,manithanin marupakkam, aracial ethir vinaigal, pothumakkalin vethanaigal, students puratchi

விவசாயிகள் போராட்டம் நியாயமானதே" ...

விவசாயிகள் போராட்டம் நியாயமானதே" ...

ஆனால் போராடும் இடம் தான் தவறு....!!!
ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போது சென்னை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . பிரதமர் மோடி அவர்கள் ரூ 1000 கோடி அறிவித்தார்கள் . பிறகு வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிறகு ரூ 1000 கோடி அறிவித்தார். மாநில அரசு ரூ 5000 கோடி கேட்டது .

ஆனால் மத்திய அரசிடம் இருந்து வாங்கிய ரூ 2000 கோடியில் இது வரை 50% நிதி வரை மாநிலஅரசு மக்களுக்கு வழங்க வில்லை.
அதன்பிறகு "வர்தா புயல்" வந்தது... இரண்டுநாள் காற்று மழையில் மின்கம்பங்கள் சாய்ந்தன . மரங்கள் வேரோடு சாய்ந்தன .இதற்கு ரூ 22600 கோடி மாநில அரசு கேட்கிறது. சென்னை முழுவதும் தண்ணீரால் தத்தளித்த போது ௯ட இவ்வளவு நிதி கேக்க வில்லை.
தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஒரு தொகை வழங்கப்படும் .அப்படி வழங்கிய தனியார் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ரூ 300 கோடி ஒதுக்கியது. ஆனால் மாநில அரசு இதுவரை கல்லூரிகளுக்கு அந்த தொகையை செலுத்த வில்லை . இதனால் இந்த ஆண்டு தனியார் கல்லூரிகள் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என போர் குரல் எழுப்பியுள்ளனர். 


"பஞ்சாயத்ராஜ்" சட்டப்படி கிராம ஊராட்சிக்கு ஒதுக்கிய நிதியில் மாநில அரசு ரூ 16 ஆயிரம் கோடி முறைகேடாக பயன்படுத்தியுள்ளது. இதில் உள்ள உண்மைகளை தெரிந்துகொள்ள உங்கள் பகுதி ஊராட்சி கிளார்க்கிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க நம் மாநில அரசு கோரிக்கை வைத்த 10 தினங்களுக்குள் மத்திய அரசு அறிவித்தது .இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு ஐந்தாயிரம் ரூபாயும் , பயிர்காப்பீட்டு செய்த நிலம் 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் தற்போது வழங்கி வருகிறது .இவை அனைத்தும் மத்திய அரசு அளித்த நிதியே.


"டெல்லி ஏய்ம்ஸ்" மருத்திவமனைக்கு நிகரான மருத்துமனை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி தந்தது . இதுவரை தமிழகத்தில் எங்கு அமைப்பது நிலம் வழங்குவது மாநில அரசு ஒத்துழைப்பு என்ன என்று இதுவரை பதில் இல்லை.
தமிழகத்தில் 11 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டியாக்க நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது .இதுவரை ஒரு நகரத்தை ௯ட மாநில அரசு தேர்வுசெய்யவில்லை.
நதி நீர் இணைப்பிற்கு திட்டமதிப்பீடு வழங்குங்குகள், நீர் செல்லும் பாதை,மற்றும் அதன் வரைமுறை ஆகியவற்றை அனுப்புங்கள் என மத்திய அரசு கேட்டது . இதுவரை மாநில அரசு அது என்ன என்று ௯ட கேட்க வில்லை.


ஆந்திரா அரசிடம் நதி நீர் இணைப்பிற்கு திட்ட அறிக்கை கேட்கப்பட்டவுடன் .உடனே செயலில் இறங்கி 2014 துவக்கி 2016 பணிகளை முடித்துவிட்டது .கோதாவரி கங்கை இணைப்பு பணிகள் முடித்து ஆந்திரா அரசு செயல்படுத்தியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடுதோறும் கழிப்பறை வசதியை மேம்படுத்த ஒரு வீட்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் நிதி மத்திய அரசு வழங்கியது.இதில் 6000 ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது. காரணம் கேட்டபோது அனைவருக்கும் கமிஷன் தரவேண்டியுள்ளது என ஒப்பந்தக்காரர் பதில் .


இப்போது "அய்யாக்கண்ணு" அவர்கள் விவசாயத்திற்கு போராட்டம் செய்கிறார். ரூ 36 ஆயிரம் கோடி நிதி உடனே அறிவிக்க வேண்டும் , நதிநீர் இணைப்புக்கு நிதி வேண்டும் என்று. இதுகுறித்த விளக்கங்கள் மேலே பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு அயயாக்கண்ணு அவர்கள் யாரிடம் நிதி கேட்கவேண்டும் .எந்த அரசை எதிர்த்து போராட வேண்டும் என நீங்களே யோசியுங்கள். செயல்படாமல் இருக்கும் மாநில அரசை கண்டிப்பதை விடுத்து மத்திய அரசை எதிர்த்து போராடுவது எந்த விதத்தில் நியாயம்....??இத்தனை நாட்களாக டெல்லியில் போராடும் நம் விவசாயிகளை எந்த அச்சுறுத்தலும் செய்யவில்லை.மேலும் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்னன் ஆகியோர் சந்தித்து பேசினர். தற்போது விவசாயிகளும் துணைசபாநாயகர் தம்பிதுரை , திருச்சி சிவா, ஆகியோருடனும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ஆகியோரை சந்தித்தனர். அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த பிறகும் நாங்கள் வெளியேற மாட்டோம், 


தொடர்ந்து போராடுவோம்... உடனே அறிவிக்க வேண்டும் என்றால் .இவர்களை எப்படி ஆதரிப்பது ....?? நடக்கும் அனைத்து விஷயங்களையும் அனைவரும் ஊடகத்தின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். செயல்படாத மாநில அரசை கேள்வி கேட்க திராணி இல்லாமல் டெல்லியில் அரசியல் செய்யும் அய்யாக்கண்ணு பின்னால் எப்படி ஆதரவு பெருகும்...?? அய்யாக்கண்ணு கேட்டவுடன் ரூ 36 ஆயிரம் கோடியை மோடி அறிவித்து விடுவார் என்றால் .இந்த மானங்கெட்ட செயல்படாத மாநில அரசு எதற்கு....????

No comments:

Post a Comment